என்ன சம்பந்தம் உடல் எடைக்கும், தேங்காய் எண்ணெய்க்கும்?… ஷாக் ஆகிடுவீங்க

உடல் எடையை குறைப்பது என்பது வேகமாக நடக்ககூடிய ஒரு விஷயம் இல்லை என்பதால், முழுமையான ஈடுபாடும், பொறுமையும், அதிகப்படியான அர்ப்பணிப்பும் அதற்கு தேவை. உணவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கும் கலோரிகளையும் கருத்தில் கொண்டு, சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைக்க நாம் எல்லா முயற்ச்சிகளையும் எடுத்துக்கொண்டு தான் வருகிறோம். ஆனாலும் அதை குறைக்க முடியவில்லை. நீங்கள் முயற்ச்சிப்பவர் என்றால், சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு என கருதப்படும் தேங்காய் எண்ணெய்யை சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் எடையை சீராக வைத்து கொள்ளலாம். வயிற்று கொழுப்பையும் தொப்பையும் குறைக்க தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த வழி என சொல்கிறார்கள் உடல் ஆரோக்கிய நிபுணர்கள்.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது வளர்ச்சியில் மாற்றம் அடைய செய்து, அது உடல் எடைய குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெய் எப்படி பயன்படுகிறது?
  • உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற தேங்காய் எண்ணெய் பயன்படும். அதனால், உடல் ஆற்றலை அதிகம் பயன்படுத்தி கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கிறது.
  • தேங்காய் எண்ணெயில் உள்ள அமிலங்கள், உடலை முழுமையாக வைத்திருக்கும். அதனால், குறைந்த அளவிலேயே உணவு எடுத்து கொள்ள தூண்டும். அதனால், உடல் எடை சீராக பராமரிக்கப்படும்.
  • உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொண்டவர்களின் உடல் எடை குறைந்துள்ளது எனவும், சோயாபீன் எண்ணெய் பயன்படுத்தியவர்களின் வயிற்று கொழுப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
  • தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதிக அளவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த கூடாது. சமையலின் சில உணவுகளுக்கு மட்டுமே, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
  • எனினும், உணவுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன்னர், மருத்துவரின் பரிந்துரையை கேட்பது நல்லது.