ரொம்ப நாளாக தனுஷ் இழுத்து கொண்டு செய்த சாதனையை சிம்பு ஒரே நாளில் செய்து அசத்திவிட்டார்..

தனுஷ் நடித்து முடித்துள்ள படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதிலிருந்து இதுவரை 197k லைக்கையும் வாங்கியுள்ளது.

ஆனால் இந்த விஷயத்தை அவரது சினிமா போட்டியாளராக கருதப்படும் சிம்பு வெறும் ஒரே நாளில் முறியடித்து விட்டார். அதாவது சிம்பு நடித்து வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம் படத்தின் நேற்று வெளியான டிரைலர் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த சிம்பு ரசிகர்கள் இதையே குத்தி காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.