தாய்ப்பால்…. முக்கியத்துவம்…

குழந்தைக்கு தாய்ப்பாலைப் புகட்டினால் அந்த பெண்மணிக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும் என்று அண்மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தாய்ப்பால் குறித்தும், பிறந்த குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதன் முக்கியத்துவம் குறித்தும் தொடர்ச்சியாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய் பால் புகட்டுவது தொடர்பாக விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டிருக்கும் வைத்திய நிபுணர்கள், எண்ணற்ற சத்துக்கள் கொண்ட தாய்ப் பாலை புகட்டுவது குறித்து புதிய தாய்மார்களிடம் எடுத்துரைத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

அதே தருணத்தில் தாய்ப்பாலை குழந்தைக்கு புகட்டினால், அந்த பெண்மணிக்கு எதிர்காலத்தில் மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயம் குறையும் என்றும் எடுத்துரைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பாலை புகட்டவேண்டும். இதன் கால எல்லையை அதிகரிக்க அவர்கள் மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.