இலங்கையில் தனியார் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தனியார் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளின் 53 மருத்துவ கட்டணங்களுக்கு நிர்ணயத் தொகை விதிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சத்திரசிகிச்சை, ஆய்வுக்கூட கட்டணங்கள், குழந்தை பிரசவம் உள்ளிட்டவற்றுக்கான மருத்து கட்டணங்களும் இந்த நிர்ணய விலையில் உள்ளடக்கப்படுகின்றன.

அடுத்த வாரம் முதல் இந்த நிர்ணயத் தொகை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.