ராமநாதபுரம் மாவட்டம். சாயல்குடியில் தூத்துக்குடி சாலையில் பூசரிகான் என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. இங்கு வந்த நபர் சிகரட் பாக்கட்டை கடன் கேட்டதாக தெரிகிறது. கொடுக்க மறுத்ததால் தகறாறு ஏற்பட்டு கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஜாபர் அலி என்பவரை கத்தியால் குத்திய நபர் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து சாயல்குடி போலீசார் விசாரணை செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். பலத்த காயமடைந்த ஜாபர் அலி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






