கேரளாவில் பெருமழை பெய்து பல மாவட்டங்கள் முழுவதுமாக தண்ணீரில் மிதக்கின்றன. பல ஆயிரம் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இதுவரை 234 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகையான அனன்யாவின் வீடு முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. திருமணம் முடிந்து கொச்சியில் வசித்து வரும் அனன்யாவின் வீடும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பின்னர் இவர்கள் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
தற்போது பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா சரத் வீட்டில் தங்கியிருக்கிறோம் என மிகவும் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.







