அநாகரீகமாக திட்டிய மகிந்த! வைரலாகும் காணொளி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஊடகவிலாயர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, மகிந்த ராஜபக்சவிடம் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு – விஜயராமவில் அமைந்துள்ள மகிந்தவின் இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் மகிந்த கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது, தனது தனிப்பட்ட செயலாளர் ஒருவரை நோக்கி “மோடயா” என கூறி திட்டியுள்ளார். இது குறித்து காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.