வங்கி சர்வரை முடக்கி ரூ.94 கோடி சுருட்டல்..

வங்கியின் சர்வரை ‘ஹேக்’ செய்த இணைய குற்றவாளிகள் சுமார் 15,000 பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ரூ.94 கோடியை சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி சர்வரை முடக்கி ரூ.94 கோடி சுருட்டல்

புனே:

மராட்டிய மாநிலம் புனேயை தலைமை இடமாக கொண்டு காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலக சர்வர் கடந்த 11 மற்றும் 13-ந்தேதிகளில் இருமுறை ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. வங்கியின் சர்வரை ‘ஹேக்’ செய்த இணைய குற்றவாளிகள் சுமார் 15,000 பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ரூ.94 கோடியை சுருட்டி உள்ளனர்.

இந்த தொகை வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள வங்கி கணக்குகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி அடையாளம் தெரியாத வெளிநாட்டு நபர்கள் மீது புனே போலீசில் காஸ்மோஸ் வங்கி அதிகாரிகள் புகார் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.