கருணாநிதி, முன்னர் அழகிரியைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதத்தைத் தற்போது வெளியிட்டுள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள்.
நேற்று (13-8-2018) காலை மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்ற அழகிரி, அஞ்சலி செலுத்தினார். பின்னர் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள். என்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும்’ என்று பேசி புயலைக் கிளப்பினார். அழகிரியின் இந்தப் பேச்சு, தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், கருணாநிதி முன்னர் அழகிரியைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதத்தைத் தற்போது வெளியிட்டுள்ளனர். இதனால், தி.மு.க-வில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.