தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த படம் விஸ்வரூபம் 2.
இந்த படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸில் விஸ்வரூபம் 2 படம் லீக்காகி இருப்பது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.