கணக்குகளை பாதுகாக்க வருகிறது கூகுளின் புதிய வன்பொருள் சாதனம்

ஒன்லைனில் பயன்படுத்தும் கணக்குகளை பாதுகாக்க இதுவரை காலமும் கடவுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

எனினும் இவற்றினை ஹேக் செய்து கணக்குகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதனை தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இதன்படி Google Titan Security Key எனும் வன்பொருள் சாதனம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி மின்னஞ்சல், கூகுள் பிளஸ் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு கணக்குகளை பாதுகாக்க முடியும்.

தற்போது இச் சாதனத்தனை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் 85,000 பணியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படவுள்ளது.

இச் சாதனத்தின் விலையானது 20 டொலர்களிலும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.