ஈரானுடன், பேச்சு நடத்திய மைத்திரி! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரானுடன், இலங்கை அரசு நெருங்கி செயற்படுவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடுகளும் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றம் ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கொழும்பில் சந்தித்து பேசியிருந்தனர். இதன் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருந்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு, பொருளாதாரம் குறித்து பேசியிருந்ததுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையே உறவுகளை விரிவாக்குவது தொடர்பிலும் பேசியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரான் மீது அதிகாரபூர்வமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் இது அடுத்தகட்ட நிலையை அடையும்.

இந்நிலையில், யாராவது ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். நான் உலகத்தின் அமைதிக்காகவே இதைக் கேட்கிறேன். வேறு எதுவும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.