கருணாநிதியின் இரண்டாவது மனைவி யார்? அவரை பற்றிய தகவல்கள் இதோ

தயாளு அம்மாள் கருணாநிதியின் இரண்டாம் மனைவி. கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார்.

பின்னர் 1944ஆம் ஆண்டில் மு. கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மு. கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் பிறந்த பிள்ளைகள், மு. க. அழகிரி, மு. க. ஸ்டாலின், மு. க. தமிழரசு, மு. க. செல்வி.

அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் தயாளு அம்மாள்

2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், தொலைக்காட்சிக்கு அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததில், ராஜா, கனிமொழியுடன், கருணாநிதியின் மனைவி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

ஆனால், 2017 டிசம்பர் 21 ஆம் திகதி 2ஜி வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி சைனி வெளியிட்டபோது, கனிமொழி, ராசா, மற்றும் தயாளு அம்மாள் உட்பட இதில் குற்றவாளிகள் என கூறப்பட்ட 19 பேரையும் விடுதலை செய்தார்.

கடவுள் நம்பிக்கை

நாத்திகம் பேசும், கடவுள் நம்பிக்கையற்ற கணவரை திருமணம் செய்துகொண்டாலும், மனைவி தயாளு அம்மாளுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாகவும், அவர் தினமும் சாமி கும்பிடும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது.

கருணாநிதியின் முதல் மனைவி இறந்தபின்னர், கருணாநிதி சினிமா துறை மற்றும் அரசியலில் இருந்த காரணத்தால் இவருக்கு பெண் கொடுக்க வராத முன்னிலையில், இரண்டாம் மனைவியாக வந்தவர்தான் தயாளு அம்மாள்.

கருணாநிதியை திருமணம் செய்துகொண்ட நாளில் இருந்து ஒரு குடும்ப பெண்மணியாக குடும்பத்தை பராமரித்து வருகிறார், அதிகமாக பொது இடங்களில் இவர் கலந்துகொண்டது கிடையாது.