யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும்…

நவீன மயமாக்கப்பட்டு வரும் இன்றைய உலகில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமானதும் சுகாதாரமானதுமான இயற்கை சூழலோடு ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்குகின்றது .

IMG_9167-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9167 01

திரு.ஜெயசீலன் ஞானம்ஸ் இன் சிந்தனையில் உருவான இவ் பசுமை செயற்திட்டமானது யாழ்ப்பாணத்தில் பரந்த நிலப்பரப்பில் கட்டமைக்கப்பட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றது.

இவ் இயற்கை சூழலோடு இணைந்த வாழ்வியல் அனுபவத்தை நாங்களும் ஒருமுறை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பொன்றை அந் நிறுவனம் எமக்கு வழங்கியிருந்த்து.

IMG_9178-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9178 01

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள திண்ணை ஹோட்டலில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இப் பண்ணைக்கு 15 நிமிடத்தில் சென்றுவிட முடியும். இதற்கான வாகன ஒழுங்குகளையும் இவர்களே செய்து தருகின்றார்கள்.

இப் பண்ணையானது இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டிருந்த்து. இதற்காக பொன் விளையும் பூமி என்று விவசாயிகளாலும் யாழ்.மக்களால் புகழப்படும் வலிகாம்ம் வடக்கில் பத்து ஏக்கர் நிலப்பரப்பானது தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கேயே இவ் இயற்கை பண்ணை (Thinnai organic farm) அமைக்கப்பட்டுள்ளது.

IMG_9201-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9201 01

ஆரம்பத்தில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே இது தொடங்கப்பட்டிருந்த்து. இங்கே உள்ள பத்து ஏக்கர் நிலப்பரப்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பு வேளான்மைக்காக பயன்படுத்தப்படுகின்றது.

IMG_9201-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9201 011

தற்போது எமது பண்டைய விவசாய முறைகள் வழக்கொழிந்து சென்று நவீன இரசாயன கலந்த விவசாய முறைகள் பரவத் தொடங்கவிட்ட இக் காலத்தில், இப் பண்ணையில் இரசாயன பசளைகளற்ற இயற்கை முறையிலான விவசாய நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனூடாக தமது வாடிக்கையாளர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பசுமையான உணவுகளை வழங்கிவருகின்றார்கள். குறிப்பாக இங்கு இலங்கையில் பயிரிடப்படுகின்ற மரக்கறிகளில் இம் மண்ணில் பயிரிடப்படக்கூடிய அனைத்து மரக்கறிகளும் பயிரிடப்பட்டு வருகின்றது. அதேபோன்று பழ வகைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன.

IMG_9206-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9206 01

இன்னும் ஒராண்டுகளில் இயற்கையான மாம்பழங்களை உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை தவிர விலங்கு வேளாண்மையும் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் ஆடு போன்றனவும் இப் பண்ணையில் அதற்கேற்ற வாழ்வியல் சூழல் அமைப்பில் சுகாதார முறைப்படி வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

IMG_9206-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9206 011

இதனூடாக இங்கே நேரடியாக 15 தொடக்கம் 20 வரையானவர்களும் மறைமுகமாகவும் அதே அளவிலானவர்களும் வேலைவாய்புக்களை பெற்று வருகின்றார்கள்.

இவ்வாறு பசுமையாக இயற்கையான முறையில் இங்கே உற்பத்தியாக்கப்படும் வேளாண்மை பொருட்கள் அனைத்தும் தின்னை ஹோட்டலிற்கே விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

 

IMG_9227-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9227 01

இவை தவிர ஆரோக்கியமான சுகாதர முறையிலான இம் மரக்கறி தேவைப்படுகின்றவர்களுக்கு இதனை கொண்டு சேர்க்கும் வகையில் எதிர்காலத்தில் கீல்ஸ் சூப்பர் மாக்கெட்டில் இதனை பெற்றுக்கொள்ள கூடிய ஒழுங்களும் செய்யப்பட்டுள்ளன.

தற்போது மின்னஞ்சல் மூலமாக இங்குள்ள மரக்கறி மற்றும் வேளாண்மை பொருட்களை தெரிவு செய்து பதிவு செய்வதனூடாக அவற்றை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் குளிரூட்டி வசதியுள்ள பேரூந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படவும் அதனை வாடிக்கையாளர்கள் புதிய மரக்கறிகளாகவே அங்கு பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

IMG_9243-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9243 01

இந்நிலையில் இங்கு வேளாண்மை மாத்திரமன்றி பசுமையான சூழலில் அமைந்த வாழ்விட அனுபவத்தை Thinnai organic farm வழங்குகின்றது. அதற்காக இங்கே “பசுமை, மருதமுனை” ஆகிய இரண்டு வித்தியாசமான வீடுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ் வீடுகள் மற்றும் கட்டிக் கலையானது யாழ்ப்பாணத்து மக்களது வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்ற வகையில் அவர்களது கட்டிடக் கலையினை மையப்படுத்தி சிறந்த வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

IMG_9246-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9246 01

இவை தவிர 09 கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனுள் சௌகரியமான படுக்கை, சிறிய அலுமாரி, மின் விசிறி, போன்றனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கான குளியலறை தொகுதியானது பொதுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவை யாவும் அப் பண்ணையில் முற்றிலும் மரங்கள் சூழ்ந்த பகுதிகளின் நடுவேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கே தங்கியிருப்பது மகிழ்ச்சிகரமானதும், புதுமையானதுமா அனுபவத்தை வழங்குவதாக உள்ளது.

 

IMG_9256-01 யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் IMG 9256 01

பண்ணையின் நடுவில் சுமார் 500 பேர் பங்குகொள்ள கூடிய விசாலமான “சாந்தம்” கட்டிடம் காணப்படுகின்றது. இதனை சுற்றி முற்றிலும் பசும் புற தரை காணப்படுவதுடன் பெரிய நீர் நீர் நிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஷேட நிகழ்வுகள் கொண்டாட்டங்களை நடாத்த கூடிய வகையில் ஒலைக் கூரைகளை கொண்ட அழகிய சிறு சிறு கொட்டகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இங்கே தங்கியிருந்து பொழுதை கழிக்க வருவோர் இப் பண்ணையில் தாமாகவே சென்று தமக்கு தேவையான மரக்கறிகளையும் பழங்களையும் மாமிச உணவுகளையும் அங்கிருக்கும் தோட்டக்கார்ர்களிடம் பெற்று வந்து தமக்கு பிடித்தால் போல சமையல்கார்ர்களூடாக சமைத்து உண்ணக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

அத்துடன் உணவை பச்சையாகவே தீயல் வாட்டி உண்ணும் BBQ வசதிகளும் வழங்கியிருக்கின்றார்கள்.

இவை தவிர உடலுக்கு ஆரோக்கிம் தரும் வகையில் காலையில் நடை பயிற்சியும், யோகசன பயிற்சிகளும் ஆயுள்வேத சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுவதுடன் சிறுவர்களுக்கான சித்திரம் வரைதல், பட்மின்டன் போன்ற விளையாட்டுக்களை விளையாடவும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றார்கள்.

எமது முன்னோரது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறைகள் முற்றாக அழிவடைந்து கிராமங்கள் அனைத்தும் நகரகங்களாகிவிட்ட இன்றைய காலத்தில், தனது வாடிக்கையாளர்களுக்கு மீளவும் அச் சுகமான வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதில் திண்ணை ஹோட்டல் நிறுவனத்தினர் சிறப்பாகவே செயற்படுகின்றார்கள் என்பதை நீங்களும் ஒரு முறை உங்கள் குடும்பத்தாருடன் அங்கு சென்று வந்தால் தெரிந்துகொள்வீர்கள்.

(ரி.விரூஷன் )