சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்காக தொண்டர் ஒருவர் மொட்டையடித்து அலகு குத்தி வலம் வரும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கடந்த ஒரு வாரமாக மோசமடைந்துள்ளனது. முதலில் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நான்காவது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவி வருகின்றன. இதனால் மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஜெய் கருணாநிதி ? pic.twitter.com/vhyGMTQt98
— ℳᏒ.காவி™ (@Ramke_twits) July 31, 2018
இந்நிலையில் பெரியார் கொள்கைகளை பின்பற்றும் திமுகவினர் கருணாநிதி நலம்பெற வேண்டி மொட்டை அடிப்பது, பூசணிக்காய் சுற்றுவது, விளக்குகளை ஏந்தி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது, தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை செய்வது என ட்ராக் மாறி செல்கின்றனர்.

திமுக கரைவேட்டி கட்டி கரை துண்டை அணிந்தபடி உள்ள அந்த நபர் தனது சட்டையில் கருணாநிதி, ஸ்டாலின் உருவங்கள் பதிக்கப்பட்ட சட்டையை அணிந்துள்ளார். அலகின் இருபுறமும் கட்சியின் கொடியை கட்டி வலம் வருகிறார் அந்த விசுவாசி.






