ஜெயலலிதா குறித்து வெளியான வீடியோ உண்மையானதா?

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மறைவுக்கு பின்பு வெளியானது. அவ்வாறு ஜெயலலிதா ஜூஸ் குடித்தபோது இருந்ததாக கூறப்பட்ட அறையை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் ஆய்வு செய்தனர்.

அந்த அறையின் அமைப்பும், வீடியோவில் உள்ள காட்சிகளும் முரண்படுவதால் அந்த வீடியோ உண்மையானதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது.

அந்த அறையின் அமைப்புப்படி பார்த்தால் ஜெயலலிதா படுத்திருந்த இடத்துக்கு எதிரே வாசல் தான் உள்ளது. அங்கு தொலைக்காட்சி இருக்க வாய்ப்பு இல்லை. அதேபோன்று ஜன்னலும் இல்லை. வீடியோவில் இருந்த அமைப்பே அந்த அறையில் இல்லை. இதன்மூலம் அந்த வீடியோ உண்மையானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கேட்டதற்கு, தற்போது அந்த அறையை அறுவை சிகிச்சை கூடமாக மாற்றி விட்டதாக அப்பல்லோ தரப்பில் கூறப்பட்டது கேள்விக்குறியாக உள்ளது.

நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவின் பேரில் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.