சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் என்ன செய்யணும்?… என்ன செய்யவே கூடாது?

நீரிழிவு நோய் என்பது நம்முடைய இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் (இரத்தசர்க்கரை) அளவினைக் கட்டுப்படுத்த முடியாத நிலையையே குறிப்பதாகும். நம்முடைய உடலில் சர்க்கரையை உறிஞ்சப்படுவதற்கான இன்சுலின் சுரப்பு முறையாக செயல்படாமல் இருத்தல், அல்லது இன்சுலின் உற்பத்தி போதுமானதாக இல்லாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் தான் நிகழ்கின்றன. நம்முடைய உடலில் ரத்த சர்க்கரை அளவினை சராசரியாக நிலைநிறுத்த டயட்டில் சில எளிமையாக செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாத விஷயங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை தினமும் முறையாகப் பின்பற்றி வந்தாலே போதும். எளிதாக நாம் சர்க்கரை நோயாளியிலிருந்து விடுபட்டு விட முடியும்.

செய்யக்கூடியவை
சர்க்கரை நோயாளிகள் முதலில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உணவுக் கட்டுப்பாடு தான். அதில் மிக கவனமாக இருந்தாலே போதும். மிக எளிமையாக நீரிழிவு நோயை விரட்டியடிக்க முடியும்.

முழு தானியங்கள்:
உடைத்த பருப்புகளை விட, முழு தானியங்கள் தான் சிறந்தது. ஏனெனில் அதில் தான் முழுமையான நார்ச்சத்து உங்களுக்குக் கிடைக்கும். முழு தானிய வகைகள், பயறுகளை தினமும் உண்பதால் ரத்த சர்க்கரையின் அளவு திடீரென அதிகமாதல் தடுக்கப்படும். எனவே கோதுமை ப்ரட், பிரவுன் ரைஸ், கோதுமை பாஸ்தா மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதினால், சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க முடியும். குறிப்பாக, இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதால் அரிசி உணவு தவிர்க்கப்படும். அரிசி உணவு தவிர்க்கப்பட்டாலே சர்க்கரை நோயால் உண்டாகும் பாதி பிரச்னைகள் குறைந்து விடும்.

பாகற்காய் பாகற்காயானது இயற்கையாகவே தாவர இன்சுலின் அதிகமாகக் கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் உதவக்கூடிய காய் வகையாகும். இதனை தினமும் காலையில் சாறாகவோ அல்லது உணவில் ஓர் அங்கமாகவோ சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் பாகற்காய் விதைகளை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பொடியை தினமும் தண்ணீரில் கலந்து தினமும் காலை நேரத்தில் குடித்து வரலாம்.

வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் வெந்தயம் மிகச் சிறந்த மருந்து என்று சொல்லலாம். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் அமிர்தத்துக்கு சமமான ஒன்று. இதை எப்படி சாப்பிட வேண்டும்?… இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவுக்கு வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம். அதேபோல், வெந்தயத்தை எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, அந்த பொடியையும் வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வரலாம். அதேபோல, கடுகு துவையல் செய்வது போல வெந்தயத்தையும் துவையல் செய்து இட்லி, சாதத்துடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

வாழ்க்கைமுறை: தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சர்க்கரை சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்வது மிக மிக அவசியம்

செய்யகூடாதவை சர்க்கரை நோயாளிகள் முதலில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உணவுக் கட்டுப்பாடு தான். அதில் மிக கவனமாக இருந்தாலே போதும். மிக எளிமையாக நீரிழிவு நோயை விரட்டியடிக்க முடியும். அப்படி நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் செய்யவே கூடாத விஷயங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்று தெரிந்து கொண்டு கடைபிடித்து வருவது மிக அவசியம்.

அதிக கொழுப்புள்ள உணவுகள்: சர்க்கரை நோய்யுள்ளவர்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கார்போஹெட்ரேட் தவிர்பது போலவே கொழுப்பு உணவுகளிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் சாச்சுரேடட் ஃபெட், ஃபுல் ஃபெட் பால் பொருட்கள், கீரிம் கொண்ட சாஸ் வகைகள், சாக்லேட், வெண்ணெய், ஹம்பெர்க் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

எளிதில் கரையக்கூடிய சர்க்கரை மூலக்கூறுகள்: எளிதில் கரையக்கூடிய சர்க்கரை மூலக்கூறுகளான ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை சர்க்கரை நோயளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை குளிர்பானங்கள், இனிப்பு வகையான டெசர்ட்கள், பல பழங்களின் சாறுகள் மற்றும் இதர பானங்களில் உள்ளது. பானங்களில் அதன் உள்ளடக்கத்தைப் படித்து தெரிந்த பின் அருந்தவும். காய் சாறுகள் மற்றும் சர்க்கரை இல்லா உணவுகள் நன்மையே தரும்.

வாழ்க்கை முறை உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்ல, சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம் என்றாலும் கூட, அதி தீவிரமான உடற் பயிற்சியும் உங்களுடைய நிலைமையை மிக மோசமான மாற்றிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்