திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தொடர் மருத்துவ சிகிச்சையால் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய குடியரசு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கருணாநிதியை இன்று சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
வெங்கய்யா நாயுடுவுடன் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், மு.க ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் புகைப்படத்தில் உள்ளனர்