யாழில் தாவித்திரியும் குள்ள மனிதர்கள்!

மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­ம் சம்பவங்களால், அராலியில் நேற்­றி­ர­வு பெரும் பதற்­றம் நில­வி­யது.நேற்று இரவு அராலி, ஐய­னார் ஆல­யத்­தைச் சூழ­வுள்ள பகு­தி­க­ளில் இந்­தக் குள்ள மனி­தர்­க­ளின் தாக்­கு­தல் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. அரா­லி­யில் உள்ள அதி­க­மான வீடு­கள் மீது நேற்­றி­ரவு கல் வீசப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கல் எறிந்­து­விட்டு மரத்­துக்கு மரம் தாவி­யும் ஒடி­யும் மறை­யும் குள்­ளர்­க­ளைத் தேடி ஊர­வர்­கள் திரண்­ட­னர். இத­னால் அந்த இடம் பதற்­றக் கள­மா­னது. மக்­களை அச்­சு­றுத்­து­வ­தற்­காக திட்­ட­மிட்டு இவ்­வாறான சம்­ப­வங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்று இளை­ஞர்­கள் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வ­னுக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது. அவர் உட­ன­டி­யாக அந்த இடத்­திற்கு விரைந்­தார். நில­மை­களை அறிந்து வட்­டுக் கோட்­டைப் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­னார்.

இரவு 8.30 மணி­ய­ள­வில் வட்­டுக்­கோட்டை பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட பொலி­ஸார் குழு­வி­னர் சம்­பவ இடத்­துக்கு வந்­து விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

கடந்த சில தினங்­க­ளா­கவே வீடு­கள் மீது கல்­வீச்சு நடப்­ப­தாக மக்­கள் முறை­யிட்­ட­னர். குள்­ளர்­கள் வீடு­க­ளின் கூரை­க­ளில் தாவு­வ­தால் வீட்­டில் உள்ள பெண்­கள், சிறு­வர்­கள் பயத்­து­ட­னேயே வாழ்­கின்­ற­னர் என்­ற­னர். வீட்­டுக் கூரை­யில் ஏதோ ஒன்று விழு­வது போன்று சத்­தம் கேட்டு வெளி­யில் வந்­தால் குள்ள மனி­தர்­களை ஒத்­த­வர்­கள் கூரை­யில் இருந்து மதி­லுக்­குப் பாய்ந்து மதி­லில் இருந்து வீதிக்­குப் பாய்ந்து சில நொடி­க­ளில் தப்­பித்­துச் சென்­று­ வி­டு­கின்­ற­னர் என்­றும் மக்­கள் தெரி­வித்­த­னர்.

அண்­மை­யில் பொது­மக்­கள் அவர்­க­ளைத் துரத்­திச் சென்­ற­னர். அவர்­கள் அரா­லித் துறை நோக்கி ஓடித் தப்­பி­னர். நேற்று முன்­தி­னம் கட­லுக்­குச் சென்று வந்த ஒரு­வரை மடக்­கிய குள்ள மனி­தர்­கள், அவரை விசா­ரித்­துள்­ள­னர். இத­னால் அவர் பயத்­தில் உள்­ளார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. மிக­வும் குள்­ள­மாக இருக்­கும் அவர்­கள் கைக் கோட­ரி­யை­யும் வைத்­துள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சில­ருக்கு கைக் கோட­ரி­யைக் காட்­டிப் பய­மு­றுத்­தி­யுள்­ள­னர். எனவே பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளுங் கள் என்று மக்­கள் பொலி­ஸாரை கேட்­ட­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வ­னி­ட­மும் அந்­தக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

இது தொடர்­பான கூட்­ட­மொன்று இன்று மாலை 5 மணிக்கு அராலி மாவத்தை விளை­யாட்டு மைதா­னத்­தில் பொலி­ஸா­ரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் பொலி­ஸார், மற்­றும் கிராம மக்­க­ளைக் கலந்­து­கொள்­ளு­மாறு மூத்­த­வர்­கள் வேண்­டு­கோள்­வி­டுத்­த­னர். மேல­திக விசா­ர­ணை­களை பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.