கோபாலபுரத்திலிருந்து கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள்

சென்னை: சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் மற்றும் நோய் தொற்று இருந்தது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காய்ச்சல் குறைந்ததாக கூறப்பட்டது.எனினும் நேற்று இரவு 12 மணிக்கு கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து அவர் மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து படிக்கட்டுகள் வழியாக வெளியே கொண்டு வரப்பட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானது.

எனினும் நேற்று இரவு 12 மணிக்கு கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து அவர் மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து படிக்கட்டுகள் வழியாக வெளியே கொண்டு வரப்பட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானது.

ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த கருணாநிதியை மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.