டம்­மியை’ நிறுத்­து­வாரா : மஹிந்த? – சத்திரியன் (கட்டுரை)

முதலில் கோத்­தா­பய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகி­யோரின் பெயர்கள் தான் அடி­பட்­டன. இவர்­க­ளுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன.

அதே­வேளை இப்­போது ராஜபக் ஷ சகோ­த­ரர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­டாது, நிச்­சயம் நாமல் தான் வேட்­பாளர், பொறுத்­தி­ருந்து பாருங்கள் என்று ஊவா முத­ல­மைச்சர் சாமர தச­நா­யக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்­டி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் டம்­மி­யாக ஒரு­வரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனா­தி­பதி ஆசனத்தில் மஹிந்­த­வினால் அமர முடியும் என்ற வாதங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய தரு­ணத்தில் உச்­சநீ­தி­மன்­றத்தில் சட்­ட­வி­யாக்­கி­யானம் முக்­கி­ய­மாகத் தேவைப்­படும். அது மஹிந்த ராஜபக் ஷவுக்குச் சாதகமாக அமை­யுமா என்ற கேள்­வி­களும் இருக்­கின்­றன.

பொது­ஜன பெர­மு­னவின் 2020 ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜபக் ஷ நிய­மிக்­கப்­பட்­டுள்ளார் என்று, மஹிந்த ராஜபக் ஷவின் பெயரில் ஊட­கங்­களில் பர­விய அறிக்கை, பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி விட்­டது.

மஹிந்த ராஜபக் ஷ தனிப்­பட்ட பய­ண­மாக சிங்­கப்பூர் சென்­றி­ருந்த போது தான் இந்த அறிக்கை பெரும்­பா­லான சமூக ஊட­கங்­களில் பரவியது.

உட­ன­டி­யா­கவே, மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகச் செய­லாளர் ரொகான் வெலி­விட்ட, அவ்­வா­றான முடிவு எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஊட­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது பொய்­யான அறிக்கை என்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்டார்.

அது­போல கோத்­தா­பய ராஜபக் ஷவும், தனது டுவிட்டர், பேஸ்புக் பக்­கங்­களில், இது பொய்­யான செய்தி என்றும், மக்­களைக் குழப்பும் நட­வ­டிக்கை என்றும் பதி­வு­களை இட்­டி­ருந்தார்.

2019 டிசம்­பரில் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட்­டே­யாக வேண்­டிய நிலையில், ஆளும்­கட்­சிகள் தரப்பில் யார் வேட்­பாளர் என்ற கேள்­வியை யாரும் கேட்­ப­தில்லை.

ஆனால், எதி­ரணி பக்­கத்தில், அதா­வது மஹிந்­தவின் தரப்பில் யார் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டுவார் என்­ப­தையே எல்லா ஊட­கங்­களும், கிளறிக் கொண்­டி­ருக்­கின்­றன.

முதலில் கோத்­தா­பய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகி­யோரின் பெயர்கள் தான் அடி­பட்­டன. இவர்­க­ளுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன.

அதே­வேளை இப்­போது ராஜபக் ஷ சகோ­த­ரர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­டாது, நிச்­சயம் நாமல் தான் வேட்­பாளர், பொறுத்­தி­ருந்து பாருங்கள் என்று ஊவா முத­ல­மைச்சர் சாமர தச­நா­யக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்­டி­யி­டு­கிறார்.

ஆனால், 2019இல் ஜனா­தி­பதி தேர்தல் நடக்கும் போது, நாம­லுக்கு 35 வயது ஆகி­யி­ருக்­காது. அவ­ருக்கு இப்­போது தான், 32 வயது. ஜனாதிபதி தேர்­தலில் 35 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் தான் போட்­டி­யிட முடியும் என்று அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தில் கூறப்­பட்­டுள்­ளது.

நாம­லுக்கு “செக்“ வைக்கும் நோக்கில், தற்­போ­தைய அர­சாங்கம் செய்த சூழ்ச்சி இது. இதனைத் தாண்டி அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது சாத்­தி­ய­மில்­லாத விடயம்.

எனவே நாமல் ராஜபக் ஷவை தவிர்த்து விட்டுத் தான், சாத்­தி­ய­முள்­ள­வர்கள் யார் என்று பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அதே­வேளை, ஜனா­தி­பதி தேர்­தலில் ராஜபக் ஷ குடும்­பத்தைச் சாரா­த­வர்­களின் பெயர்­களும் அடி­படத் தொடங்­கி­யுள்­ளன. அதில் முக்­கி­ய­மான நபர், பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ்.

இவர் பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ராக இருக்­கிறார். ஆனால் வெறும் டம்மி தான். ராஜபக் ஷவினர் எடுக்கும் முடி­வு­க­ளுக்கு கட்­டுப்­படக் கூடி­யவர்.

ராஜபக் ஷவினர் சொல்லும் எதற்கும் இவர் தலை­யாட்டக் கூடி­யவர் என்­பதே, ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ரணி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வ­தற்குத் தேவை­யான முழுத் தகுதி.

கடந்த வியா­ழக்­கி­ழமை ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு பேட்­டி­ய­ளித்­தி­ருந்த பசில் ராஜபக் ஷ, ராஜபக் ஷ குடும்­பத்­துக்கு வெளியே உள்­ள­வர்­களும் , ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ள­தாக கூறி­யி­ருந்தார்.

105 டம்­மியை' நிறுத்­து­வாரா : மஹிந்த? - சத்திரியன் (கட்டுரை) டம்­மியை' நிறுத்­து­வாரா : மஹிந்த? - சத்திரியன் (கட்டுரை) 105
ஆனாலும், யார் யாரு­டைய பெயர்கள் அவ்­வாறு பரி­சீ­ல­னையில் இருக்­கின்­றன என்­பதை அவர் கூற மறுத்து விட்டார்.

எல்லாம் அவன் செயல் என்­பது போல, மஹிந்த ராஜபக் ஷவே முடி­வெ­டுப்பார், அவரே எல்­லா­வற்­றையும் சரி­யான நேரத்தில் பார்த்துக் கொள்வார், இனி ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து எதுவும் பேச­மாட்டேன் என்றும் பசில் ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

கிட்­டத்­தட்ட இதே பாணியில் தான், மஹிந்த ராஜபக் ஷ பொருத்­த­மா­ன­வரை பொருத்­த­மான நேரத்தில் வேட்­பா­ள­ராக அறி­விப்பார், அவ­ருக்கு எல்­லா­வற்­றையும் தீர்­மா­னிக்கும் திறன் உள்­ளது என்று கோத்­தா­பய ராஜபக்ஷவும் கூறி­யி­ருந்தார்.

அதே­வேளை, ராஜபக் ஷவினர் ஒன்­று­பட வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ள­தாக, சமல் ராஜபக் ஷவும் கூறி­யி­ருக்­கிறார்.

அதா­வது, ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில், மஹிந்த ராஜபக் ஷ கை­காட்டும் ஒரு­வரை ஏற்றுக் கொள்­வது அல்­லது அவர் முடிவை அறி­விக்கும் வரை எதையும் வெளிப்­ப­டுத்­தாமல் இருப்­பது என்ற விட­யத்தில் ராஜபக் ஷவினர் மத்­தியில் இணக்­கப்­பாடு ஒன்று ஏற்பட்டுள்­ள­தாக தெரி­கி­றது.

பசில் ராஜபக் ஷ தன்­னிடம் ஜனா­தி­ப­தி­யாகும் கனவு இல்லை என்­கிறார். கோத்­த­பய ராஜபக் ஷவோ, மஹிந்த ராஜபக் ஷ தன்னை போட்­டியில் நிறுத்­தினால் வென்று காட்­டுவேன் என்­கிறார்.

வெளிப்­ப­டை­யாக யாரும், தாம் போட்டிக் களத்தில் இருக்­கிறோம் என்­பதை காட்டிக் கொள்­ளாமல் இருக்­கின்­றனர்.

இருந்­தாலும், கோத்­தா­பய ராஜபக் ஷவையும், சமல் ராஜபக்ஷவையும் முன்­னி­றுத்­து­ப­வர்கள் அதற்­கான பிர­சா­ரங்­களைச் செய்து கொண்­டி­ருக்­கின்­றனர்.

கோத்­தா­பய ராஜபக்ஷ தான் அடுத்த ஜனா­தி­பதி என்­ற­வாறு வியத்­மக போன்ற அமைப்­பு­களைச் சேர்ந்­த­வர்கள் செய்யும் பிர­சா­ரங்கள் மஹிந்த ராஜபக் ஷவை எரிச்­ச­ல­டையச் செய்­தி­ருக்­கி­றது.

அதனால் தான், தான் இன்­னமும் யாரையும் வேட்­பா­ள­ராக தெரிவு செய்­ய­வில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார். அது வியத்கம அமைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு கடும் ஏமாற்­றத்­தையும் , அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அந்த அமைப்பின் முக்­கிய புள்­ளி­களில் ஒரு­வ­ரான நாலக கொட­ஹேவா, இது தொடர்­பாக மஹிந்த ராஜபக் ஷவிடம், நேர­டி­யா­கவே கவலையை வெளிப்­ப­டுத்­தி­ய­தா­கவும் கூட தக­வல்கள் உள்­ளன.

இப்­ப­டிப்­பட்ட சூழலில் தான்- அதா­வது, கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்த முடி­வெ­டுக்­க­வில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறிய பின்னர் தான்- கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யி­ருக்­கிறார் மஹிந்த ராஜபக் ஷ என்ற போலி­யான அறிக்கை ஊட­கங்­களில் பர­வி­யது.

மஹிந்­த­வுக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் இடை­யி­லான உற­வு­களில் விரி­சல்­களை ஏற்­ப­டுத்தும் நோக்கில் இது பரப்­பப்­பட்­டி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

அல்­லது, இப்­ப­டி­யொரு அறிக்­கைக்கு மஹிந்த ராஜபக் ஷ எப்­படி பிர­தி­ப­லிக்­கிறார் என்­பதை அறிந்து கொள்­வ­தற்கு,ம் கோத்­தா­பய ராஜபக் ஷவின் அனு­தா­பிகள் கூட இவ்­வாறு செய்­தி­ருக்­கலாம்.

எது எவ்­வா­றா­யினும், உட­ன­டி­யா­கவே கோத்­தா­பய ராஜபக் ஷவும், மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகச் செய­லா­ளரும் வெளி­யிட்ட மறுப்பு அறிக்­கைகள், இதனை அவர்கள் தீவி­ர­மான விட­ய­மாக எடுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தையே காட்­டு­கி­றது.

அதா­வது, கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்தும் எண்ணம், மஹிந்த ராஜபக் ஷவிடம் இல்­லையோ என்று சந்­தே­கிக்கும் அள­வுக்கு, சில விட­யங்கள் நடந்­தி­ருக்­கின்­றன.

மஹிந்த அணியைச் சேர்ந்த சி.பி.ரத்­நா­யக்க அண்­மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்­டி­ருந்தார். “மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டலாம் அதற்குத் தடை­யில்லை. அதற்கு ஒரு வழி­யுண்டு. அதனை நாம் இப்­போது வெளிப்­ப­டுத்­த­மாட்டோம்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.

19 ஆவது திருத்­தச்­சட்டம் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட தடை விதிக்­கி­றது. ஆனாலும், அவர் போட்டியிடு­வ­தற்கு வாய்ப்­புகள் இருக்­கி­றது என்று சி.பி. ரத்­நா­யக்க கூறி­யி­ருப்­பது, சட்­டத்தின் ஓட்­டைகள் எதை­யா­வது தேடிப்­பி­டித்­தி­ருக்­க­லாமோ என்ற சந்­தே­கத்தை சில­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாதே தவிர, ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது என்று சட்­டத்தில் கூறப்­ப­ட­வில்லை என்­ப­தையும் சிலர் நினை­வு­ப­டுத்­து­கி­றார்கள்.

அதா­வது, ஜனா­தி­பதி தேர்­தலில் டம்­மி­யாக ஒரு­வரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனா­தி­பதி ஆச­னத்தில் மஹிந்­த­வினால் அமர முடியும் என்ற வாதங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய தரு­ணத்தில் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் சட்­ட­வி­யாக்­கி­யானம் முக்­கி­ய­மாகத் தேவைப்­படும். அது மஹிந்த ராஜபக் ஷவுக்குச் சாத­க­மாக அமை­யுமா என்ற கேள்­வி­களும் இருக்­கின்­றன.

பின்­க­தவு வழி­யாக ஜனா­தி­பதி ஆச­னத்தைப் பிடிக்கும் எண்ணம், மகிந்த ராஜபக் ஷவிடம் இருக்­கு­மானால், அவர் நிச்­ச­ய­மாக, கோத்­தா­பய ராஜ­பக்ச போன்ற ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிறுத்த முனை­ய­மாட்டார்.

ஏனென்றால், கோத்­தா­பய ராஜபக்ஷ போன்­ற­வர்கள், அண்­ண­னுக்­காக பத­வியை விட்­டுக்­கொ­டுக்க முன்­வந்­தாலும், அவரைச் சுற்­றி­யி­ருக்கும் கடும் போக்­கா­ளர்கள் அதனை அனு­ம­திக்­க­மாட்­டார்கள்.

அது மஹிந்­த­வுக்கு தேவை­யற்ற சிக்­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும். எனவே அதி­க­ளவு றிஸ்க் எடுத்து அவரை வேட்­பா­ள­ராக நிறுத்தி, குடும்­பத்­துக்­குள்­ளேயும் கட்­சிக்­குள்­ளேயும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வதை விட, வெளியில் இருந்து டம்மி ஒரு­வரைத் தெரிவு செய்­வது அவரைப் பொறுத்­த­வரை புத்­தி­சா­லித்­த­ன­மா­னது.

ஆனால், டம்மி ஒரு­வரை வேட்­பா­ளரை நிறுத்­து­வ­திலும் சிக்­கல்கள் உள்­ளன.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விம­ல­வீர திச­நா­யக்­கவை போட்­டியில் நிறுத்­தி­னாலும் கூட வெற்றி பெறுவோம் என்று அம்­பா­றையில் நடந்த பொது­ஜன பெர­முன கூட்­டத்தில் பசில் ராஜபக் ஷ, கூறி­யி­ருந்தார்.

அதா­வது வேட்­பாளர் யார் என்­பது முக்­கி­ய­மல்ல, தமது கட்சிக்கும் மஹிந்தவுக்கும் உள்ள பலமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது பசிலின் கருத்து.

அத்தகையதொரு சூழல் இருந்தால் மாத்திரமே, டம்மி வேட்பாளரை மஹிந்தவினால் துணிந்து களமிறக்க முடியும்.

ஆளும்கட்சி பலமான ஒருவரை நிறுத்தும் போதும், தனிப்பட்ட செல்வாக்குடைய ஒருவராக அவர் இருக்கும் போதும், டம்மிகளை வைத்து மஹிந்தவினால் ஆட்டத்தை ஆட முடியாது.

அப்படியான நிலையில் கோத்தாபய ராஜபக் ஷவோ அல்லது வேறெந்த வலுவான வேட்பாளரையோ தான், மஹிந்த நிறுத்த வேண்டும்.

எனவே தான், மஹிந்த இந்த விடயத்தில் அவசரப்படாமல் இருக்கிறார். அவசரப்பட்டு அவர் எடுத்த முடிவு தான், அரைகுறையில் அவரது ஜனாதிபதி பதவியை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது.

மீண்டும் ஒருமுறை அப்படியான முடிவுக்குச் செல்ல அவர் முனையமாட்டார் என்றே தெரிகிறது, அதுவரைக்கும் கோத்தாவா பசிலா, சமலா, பீரிசா என்று பல்வேறு பெயர்கள் உலாவிக் கொண்டு தான் இருக்கப் போகின்றன.

-சத்­ரியன்