மீண்டும் ஜஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன்!

8 வருடங்களுக்கு பின், ஜஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் காதல் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Aishwarya Rai Abhishek Bachchan join new movie

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

பிரபல பாலிவுட் காதல் ஜோடி நடிகை ஜஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் இருவரும், திரையிலும் சரி திரைக்கு பின்னாலும் சரி பலருடைய ஃபேவரட் ஜோடியாக உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து ”குரு”, ”குச் நா கஹோ”, ”தூம் 2”, ”ராவண்” போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் இணைப்பில் கடைசியாக வெளியான ”ராவண்” திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண ஆவலாக எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் உருவாக இருக்கும் ”குலாப் ஜாமூன்” படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப் படத்தைக் குறித்து பல்வேறு யூகங்கள் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்த ஜோடி படத்தில் நடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் சர்வேஷ் மெவரே இயக்கும் இத்திரைப்படத்தின் அதிகார பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும், தங்களது 10 வருட திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்திருக்கும் இவர்கள் இருவரும், 8 வருடங்களுக்கு பிறகு திரையில் மீண்டும் இணைவதே இந்த படத்தின் மிகப் பெரிய பலம் என்று சொல்லலாம்.

இந்நிலையில், நடிகை ஜஸ்வர்யா ராக்ஸ்டாராக நடித்துள்ள ”ஃபென்னி கான்” திரைப்படமானது ஆகஸ்ட் 3-ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதில் ராஜ்குமார் ராவ் மற்றும் அனில் கபூர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் அபிஷேக் நடித்துள்ள ”மர்மர்சியான்” திரைப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது.