நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் உள்ள ஏழு அடி உயர கன்னி மேரியின் வெண்கல சிலை அழுவதாக சர்ச் நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
அதில் இருந்து வரும் கண்ணீர் ஆலிவ் ஆயில் போல் உள்ளது. அதனை ரசாயன சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இது புனித பொருளாக கருதப்படுகிறது.
இந்த பொருள் கத்தோலிக்க திருச்சபைக்கு இறைவணக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு புனித எண்ணெய்யாக பயன்படுத்தப்படுகிறது என கத்தோலிக்க மறைமாவட்ட துப்பறிவாளர் லாஸ் க்ரூசஸ் கூறியுள்ளார்.
இந்த அரிதான நிகழ்வை காண அனைத்து மக்களும் தேவாலயத்தில் குவிந்துள்ளனர்.






