ரஸ்யாவிற்காக உளவு வேலைகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட பெண் படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாராகயிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரியா புட்டினாஎன்ற ரஸ்ய பெண் 56 வயது அமெரிக்கர் ஒருவருடன் வாழ்ந்தார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த உறவினை மரியா தனது நடவடிக்கைகளிற்காகவே பயன்படுத்தினார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
மரியா தனது சமூகஊடக படங்களில் 56 வயதான போல் எரிக்சன் என்பவருடன் காணப்படுகின்றார்
எனினும் அவர் அந்த நபருடன் தொடர்ந்தும் உறவை நீடிப்பது குறித்து அவர் விருப்பமின்மையை கொண்டிருந்ததை வெளிப்படுத்தும் ஆவணங்களை எவ்பிஐ கைப்பற்றியுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் உள்ள சில அமைப்புகளில் இணைந்து கொள்ள உதவினால் தன்னுடன் உடல்சுகத்தை அனுபவிக்கலாம் என அவர் சில நபர்களிடம் தெரிவித்திருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியா அமெரிக்காவின் தேசிய ரைபிள் சங்கத்தில் இணைந்துகொள்வதில் அதிக ஆர்வத்தை கொண்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த அமைப்பில் இணைவதன் மூலம் அமெரிக்க அரசியலில் செல்வாக்குள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அவர் முயன்றுள்ளார்.
சிரேஸ்ட ரஸ்ய அதிகாரியொருவரின் நேரடி உத்தரவுகளின் அடிப்படையில் அவர் செயற்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஸ்ய அதிகாரி இணையம் மூலமாக அவரிற்கு பயிற்சியளித்தார்,2016 ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக தற்போது அனைத்தும் அமைதியாகவும் அவதானமாகவும் இருக்கவேண்டும் என மரியா அந்த நபரிற்கு டுவிட்டர் செய்தியை அனுப்பினார் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
வாக்களிப்பு தினத்தன்று நான் உறங்கப்போகின்றேன்,நான் மேலதிக உத்தரவிற்காக காத்திருக்கின்றேன் என மரியா மேலதிக உத்தரவை வெளியிட்டுள்ளார்.






