கிர்கிஸ்தான் நாட்டில் இரை என நினைத்து சிறுமியை கழுகு ஒன்று தூக்கிச்செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.
கிர்கிஸ்தான் நாட்டின் இசிற்கூல் என்ற பகுதியில் கழுகுகளை வைத்து சிலர் வேட்டையாடி வந்துள்ளனர். பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட அப்பகுதியில் சிறுமி ஒருவர் தவறுதலாக சென்றுவிட, சிறுமையைக் கண்ட கழுகு இரை என நினைத்து தூக்கிச்செல்ல முயன்ற போது அங்கிருந்த சிலர் கழுகிடமிருந்து சிறுமியை மீட்டனர். சிறுமி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் .
குறித்த தகவல் சர்வதேச இணையங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன், இதன் போது எடுக்கப்பட்ட காணொளியும் வெளிவந்துள்ளது.