வயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….!

நடிகர் விஜய்சேதுபதிக்கு படங்கள் அடுத்தடுத்து கைகளில் நிரம்பி உள்ளன. கால்களில் சுடு தண்ணீரை ஊற்றியது போல் படங்களில் படு பிஸியாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.இவருக்காக பல படங்களும் காத்துக்கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்தில் இதுவரை விஜய்சேதுபதி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன.
 விஜய்சேதுபதி தான் பங்கேற்கும் காட்சிகளுக்காக விரைவில் படக்குழுவில் இணைய உள்ளார்.

இதற்காகவே இந்த மாத இறுதியில் வெளியாகும் ஜுங்கா படத்தின் புரமோ‌ஷன்களை இப்போதே தொடங்கி இருக்கிறார்.

த்ரிஷாவுடன் 96 படத்திலும் விளம்பர வேலைகளும் தொடங்கி விட்டன. இவை தவிர விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு கணவராக சில காட்சிகள் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்துக்கும் புரமோ‌ஷன் தொடங்கி உள்ளது.

நேற்று வெளியான சீதக்கதி படத்தின் தயாரிப்பு காணொளியும் வெளியானது.

அதில் பல முகங்களை கொண்டு நடிக்கவுள்ளதோடு வயதான தோற்றத்தில் மாறியிருக்கிறார்.

இப்படத்தை எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமையும்.

 

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷாவின் “96” பட டீசர்….!

 

கடைக்குட்டி சிங்கம் 3 நிமிட காட்சி அடக்கிய காணொளி வெளியீடு….!