சீனாவில் தலை கீழாக நடக்கும் அதிசய நபர் தீயாய் பரவும் காணொளி

சீனாவில் நபர் ஒருவர் தலைகீழாக நடப்பது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

40 அடி உயரத்தில் 13 மீட்டர் கட்டப்பட்டுள்ள கயிற்றில் அவர் தலைகீழாக நடக்கிறார். வேறு ஒரு நபர் இது போன்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செய்தபோது தோல்வியடைந்ததாகவும், அதை பார்த்து இவர் ஏன் நாம் இதை முயற்சிக்கக் கூடாது என்று இதற்கு பயிற்சி எடுத்து தற்போது அதில் சாதனை படைத்ததாகவும் கூறுகிறார்.

ஆசியாவில் இவர் தான் முதலில் இது போன்று நடக்கிறார் என்பது கூறிப்படத்தக்கது. இவரது இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.