ஊரே சிரிக்குது, உங்கள மன்னிக்கவே முடியாது – பிக் பாஸ் வீட்டில் கார்த்தி.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் போராக சென்று வருகிறது. போட்டியாளர்கள் யாருமே உண்மையாக இல்லை, எல்லோரும் வேஷம் போட்டு நடித்து வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

bigg boss

ஏன் கடந்த வாரம் கமல்ஹாசனும் இதை போட்டியாளர்களுக்கு கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது கடைக்குட்டி சிங்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள கார்த்தியும் அதையே தான் கூறியுள்ளார்.

நீங்க யாருமே உண்மையா இல்லை, எல்லாரும் நடிக்கறீங்க.. உங்கள பார்த்து ஊரே சிரிக்குது என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வீடு சுத்தமில்லாததை பார்த்த கார்த்தி உங்கள மன்னிக்கவே முடியாது. எல்லாரும் பார்க்கறாங்க சுத்தமாக வச்சிக்க வேண்டாவா எனவும் கூறுகிறார்.

 

இதற்கு போட்டியாளர்கள் என்ன ரியாக்ட் செய்வார்கள்? கார்த்தி சொல்வதை ஏற்று கொண்டு தங்களது குணத்தை மாற்றி கொள்வார்களா? வீட்டை சுத்தமாக வைத்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்