பி.எம்.டபுள்யூ காரில் வேகமாக பறந்த ஜூலி! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

பிக்பாஸில் மக்கள் வெறுப்பை சம்பாதித்த ஜூலிக்கு என்று பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் அவர் ஒரு ஆண் நண்பருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமுகவலை தளங்களில் டிரண்டானதை அடுத்து தற்போது அவர் பி.எம்.டபுள்யூ கார் ஓட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை ஜூலி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஜூலி ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை.

தனது தோழர் மார்க்குடன் பி.எம்.டபுள்யூ காரில் நெடுந்தூரம் சென்றதாகக் கூறி புகைப்படத்துடன் ட்வீட்டியுள்ளார் ஜூலி. கலாய் காரின் ஸ்பீடோமீட்டர் ஜீரோ கிலோமீட்டர் என்று காட்டியதை பார்த்து நெட்டிசன்கள் ஜூலியை கலாய்க்கிறார்கள்.