இன்றைய ராசிபலன் (09/07/2018)

  • மேஷம்

    மேஷம்: காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். உற்சாகமான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: காலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதி படுவீர்கள். சிலர் உங்களை விமர்சிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நேரமிது.

  • மிதுனம்

    மிதுனம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.  மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்கூடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

  • துலாம்

    துலாம்: காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்
    கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • மகரம்

    மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: எதிர்பார்த்த காரியங்கள் முடியாவிட்டாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.