நாளை சிம்பு ரசிகர்களுக்கு செம்ம விருந்து!

சிம்பு தற்போது முன்பு போல் இல்லை. படப்பிடிப்பிற்கு முதல் ஆளாக வருவது, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆவது என செம்ம பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே, இப்படத்தின் அப்டேட் எப்போது என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நேரத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், படத்தின் டெக்னிஷியன் குறித்து வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.