அகமதாபாதில் அடுக்குமாடிக் கட்டடத்தின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
ஜூகாபுரா பகுதியில் உள்ள அக்பர் டவர் எனும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென கீழே விழுந்தது.
ஓடிச் சென்று காப்பாற்ற முயன்ற இரண்டு பெண்கள், அக்குழந்தையை எடுத்துப் பார்த்தபோது காயத்துடன் தப்பியது கண்ட நிம்மதியடைந்தனர். இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்த காணொளி இதோ…