மீன் ரோஸ்ட்!!

மீன் – அரைக்கிலோ
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
தனியாதூள் – ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
உப்புத்தூள் – தேவையான அளவு

%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8dfish-roast-samayalfish-roast-sivakasi-samayalfish-roast-seivathu-eppadi

பிடித்தமான மீனை வாங்கிச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
மேல்கூறிய மசாலாத்தூள்கள் மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீரில் கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
அதன் பின் வாணலியில் 300 கிராம் இதயம் நல்லெண்ணெயை ஊற்றி சூடேறியதும் மீன் துண்டுகளைப் போட்டு பொறித்து எடுத்து உபயோகிக்கவும்.
2 முட்டைகளை அடித்து மீன் துண்டுகளை அதில் நனைத்து எடுத்தும் வறுக்கலாம். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழைகளைத் தூவி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.