எதுவும் அறியாத 19வயதுப் பெண்ணை, பார்கில் வைத்து மூவருமாக கெடுத்துவிட்டு. பின்னர் சிரித்துக்கொண்டே வரும் இந்த 3 நபர்களுக்கும் 27 வருட சிறைத் தண்டனையை பிரித்தானிய நீதிபதிகள் வழங்கியுள்ளார்கள். பிரித்தானியாவின் மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்றான, கன்ரபெரியில் கடந்த ஏப்பிரல் மாதம், பார்க் ஒன்றில் ஒரு பெண் நிர்வாணமாக கதறிக்கொண்டு இருந்தார். அயலவர்கள் பொலிசாருக்கு அழைப்பை விடுத்தார்கள். குறித்த 19வயதுப் பெண், கியூபா நாட்டு உணவுகள் பரிமாறும் ஒரு உணவகம் சென்று, அங்கே சற்று மது அருந்தியுள்ளார். சுய நினைவை இழந்து அவர் வெளியே வந்தவேளை.
சலீகா(25) சலி(23) மற்றும் ஓமர்(24) ஆகியோர் குறித்த பெண்ணை, பலவந்தமாக அருகில் உள்ள பார்க்(பூங்கா) ஒன்றுக்கு இழுத்துச் சென்று. மூவருமாக இணைந்து அப்பெண்ணை கெடுத்துள்ளார்கள். பின்னர் அப்படியே அவரைக் கைவிட்டு, சிரித்தபடி பேசிக்கொண்டு ஜாலியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். ஆனால் அங்கே வந்த பொலிசார், பெரும் விசாரணைகளை முடிக்கி விட்டு. இறுதியாக அருகே உள்ள CCTV கமராவை பார்த்து. குறித்த மூன்று பேரையும் அடையாளம் கண்டு பிடித்துவிட்டார்கள்.
தடாலடியாக இவர்கள் மூவரையும் கைதுசெய்த பொலிசார் பல ஆதாரங்களை நீதிமன்றில் சமர்பித்து இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்தார்கள். இதனை விசாரித்த நீதிபதி, இவர்களுக்கு 27 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பானது பிரித்தானியாவை அதிரவைத்துள்ளது. உள்ளே சென்றுள்ள இளைஞர்கள் 50 வயதில் தான் வெளியே வர முடியும். அவர்கள் வாழ்க்கையே ஒரு 5 நிமிட சந்தோஷத்திற்காக பலியாகிவிட்டது என்பது தான் உண்மை.