நடிகை ஹன்சிகா எங்கேயும் காதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு நிறைய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடைசியாக அவர் நடிப்பில் குலேபகாவலி என்ற படம் வெளியாகி இருந்தது.
இதற்கிடையில் அவர் உடம்பை குறைத்து விட்டதாக பல புகைப்படங்கள் இனையத்தில் வெளியாகி அதிகளவில் பேசபட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது ஒரு திரைப்பட பிரமோசன் விழாவிற்கு சென்ற ஹன்சிகாவை ரசிகர் ஒருவர் கைநீட்டி அறைந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.