குஷியான குஷ்புவின் பதவிக்கும் குட்டு விழப் போகின்றதாம்!!

நக்­மாவைத் தொடர்ந்து குஷ்­பு வின் பதவி மீதும் கை வைக்­கப்ப டும் என்று திருவின் ஆத­ர­வா­ளர்­க­ ளிடம் ராகுல் காந்தி உறுதி அளித்­தி­ருப்­ப­தாகத் தகவல்!

தமிழ்நாடு காங்­கிரஸ் கமிட்­டித்­த­லைவர் பத­வி­யி­லி­ருந்து திரு­நா­வுக்­க­ரசர் நீக்­கப்­ப­டுவார் என குஷ்பு கூறி­வந்த நிலை­யில், அவ­ரது பத­விக்கே ஆபத்து வந்­தி­ருப்­பதால் விசா­ர­ணையில் இறங்­கி­ய­போது….

காங்­கிரஸ் கட்­சியைப் பொறுத்த ­வரை எந்­த­வொரு தலை­வரும் மாவ ட்ட காங்­கிரஸ் கமிட்டி நிர்வா­கி­ களை அழைத்துப் பேசி­ய­தாகச் சரித்­திரம், பூகோளம் எதுவும் இல்லை.

ஆனால் அகில இந்­திய காங்­கிரஸ் கமிட்டித் தலை­வ­ராக ராகுல் காந்தி பத­வி­யேற்­றதும் சமீ­பத்தில் வட சென்னை மாவட்ட காங்­கிரஸ் கமிட்டி நிர்­வா­கி­களை அழைத்துப் பேசி­யி­ருக்­கிறார்.

அதன்­படி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திர­வியம் தலை­மையில் 12 சர்க்கிள் தலை­வர்கள் ஜூன் 8 ஆம் தேதி டெல்லி சென்று ராகுல் காந்­தியைச் சந்­தித்­தார்கள்.

இந்தச் சந்­திப்பின் போது ராகுல் காந்தி இரண்டு விஷ­யங்­களை உறு­திப்­ப­டுத்­தி­ய­தாக தெரி­கி­றது.ஒன்று மாநில தலைவர் பத­வி­யி­லி­ருந்து திருநாவுக்­க­ரசர் நீக்­கப்­பட மாட்டார்.

இன்­னொன்று வீணாக வதந்தி பரப்பும் குஷ்பு மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­பது தான். இது தொடர்­பாக ராகுல் காந்­தியை சந்­தித்து விட்டு திரும்­பி­யி­ருக்கும் வட சென்னை மாவட்ட காங்­கிரஸ் கமிட்டி நிர்­வா­கி­க­ளிடம் பேசிய போது:

ராகுல் காந்தி எங்­களைச் சந்­தித்­த­போது தமி­ழக அர­சியல் நிலை­வரம் குறித்தும் உட்­கட்சி பிரச்­சி­னைகள் குறித்தும் கேட்டார். மற்ற மாநி­லங்­களை விட தமிழ்­நாடு காங்­கிரஸ் கமிட்­டி­யில்தான் கோஷ்­டிப்­பூசல் அதிகம் இருப்­ப­தாக வருத்தம் தெரி­வித்தார்.

தி.மு.க., அ.தி.மு.க., டி.டி.வி.தின­கரன்.,ரஜினி, கமல் நிலை­வரம் குறித்தும் கருத்துக் கேட்­டவர் எங்­க­ளது பிரச்­சி­னைகள் பற்­றியும் கேட்டார்.

அவ­ரிடம் எங்­க­ளது குறை­களை தெரி­வித்த நாங்கள் மாநில தலைவர் பத­வி­யி­லி­ருந்து திரு­நா­வுக்­க­ரசர் இன்னும் 2 மாதங்­களில் மாற்­றப்­பட உள்­ள­தா­கவும் நீங்கள் தான் அதை சொன்­ன­தா­கவும் குஷ்பு பேட்டி அளித்­துள்­ளாரே? என்றும் கேட்டோம்.

மேலும் இ.வி.கே.எஸ். இளங்­கோவன் தலைவர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்ட இக்­கட்­டான நிலையில் திரு­நா­வுக்­க­ரசர் கட்­சியைச் சிறப்­பாக வழிநடத்தி வரு­வ­தாகக் கூறினோம்.

மேலும் தீவிர உறுப்­பினர் சேர்க்­கையில் திரு ஆர்வம் காட்­டு­வ­தோடு மக்கள் நல­னுக்­காக பல போராட்­டங்கள் நடத்தி வரு­வது குறித்தும் குறிப்­பிட்டோம். அனைத்­தையும் பொறு­மை­யாகக் கேட்­டுக்­கொண்ட ராகுல் காந்தி, மாநில தலைவர் மாற்றம் என்­பது வெறும் வதந்­திதான்.

அந்த மாதி­ரி­யான எண் ணம் எதுவும் எனக்­கில்லை. திரு­நா­வுக்­க­ரசர் மாற்­றப்­படமாட்டார் என்று உறு­தி­யாக கூறி­ய­தோடு எனது அனு­மதி இல்­லாமல் எனது பெயரைப் பயன்­ப­டுத்தி குஷ்பு பேசி­யது தவறு. அவர் மீது நிச்­சயம் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று தெரி­வித்தார் என்­றார்கள்.

ராகு­லிடம் என்ன பேசி­னீர்கள்? திர­வி­யத்­திடம் கேட்டோம் நான் எனது மாவட்­டத்தில் நடந்த ஒவ்­வொரு நிகழ்ச்சி பற்­றியும் ராகு­லுக்கு மாதம் தோறும் அறிக்கை அனுப்­புவேன். அத­னைப்­பார்த்து விட்­டுத் தான் என்னை நேரில் அழைத்­துப்­பே­சினார். அப்­போது குஷ்பு, இளங் ­கோவன் குறித்­தெல்லாம் பேசினார்.

அப்­போது திரு­நா­வுக்­க­ரசர் மாற் றம் செய்­யப்­பட உள்­ளதாக குஷ்பு கூறி­யது குறித்து கேட்­ட­தற்கு குஷ்பு அவ்­வாறு பேசியிருப்­பது தப்­புத்தான். அதுபற்றி விசா­ரித்து நட­வ­டிக்கை எடுக்­கிறேன் என்று மட்டும் சொன்னார்.

மேலும் வரு­கிற நாடா­ளு­மன்றத் தேர்­தலில் வட­சென்னையில் ராகுலை நிற்­கும்­படி சொன்னேன். அதற்கு அவரோ, நீயே அங்கு போட்­டி­யிடு என்­ப­து­போலத் தட்­டிக்­கொ­டுத்து அனுப்­பினார் என்றார்.

அகில இந்­திய செய்தித் தொடர்­பாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாக வெளி­யாகும் செய்­திகள் குறித்துக் கேட்ட குஷ்­புவை தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் போனை எடுக்­கா­ததால் மேற்­ கண்ட செய்தி தொடர்­பாக விரி­ வாக எஸ்.எம்.எஸ். அனுப்­பினோம்.

அதற்கு எஸ்.எம்.எஸ். மூலமே பதி லளித்த குஷ்பு, நான் புரளிகளுக்கு எல்லாம் பதில் சொல்வதில்லை. அதனால் இதுபற்றி எந்தக் கருத்தும் கூற இயலாது என்று தெரிவித்தார்.

ஆகவே திருவுக்கு ஆபத்தில்லை என்பதால் அவரது தரப்பு மகிழ் ச்சியும், குஷ்பு நீக்கப்படுவார் என்ற செய்தியால் அவரது தரப்பு கடும் அப்செட்டிலும் இருக்கிறது.

தகவல்: ஷண்