தமிழகத்தில் கள்ளக்காதலனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்த தாய் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தேனி அருகே உத்தமபாளையத்தின் சின்னஓபுலாபுரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி, இவரது மனைவி லதா(வயது 38), இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில் லதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாற, முத்துச்சாமிக்கு தெரியவந்துள்ளது, கோபத்தில் அவர் சண்டையிட, லதா இவரைவிட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மகளை ராஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்தால் எந்த தொந்தரவும் இருக்காது என எண்ணியுள்ளார்.
இதன்படி கடந்த 20ம் திகதி இருவருக்கும் திருமணமும் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தெரியவந்ததும் முத்துச்சாமி பொலிசில் புகார் அளிக்க, ராஜ்குமார், லதா உட்பட நால்வர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.