அமெ­ரிக்­காவின் முடிவு தமி­ழர்­க­ளுக்கு பாத­கமா? -ஹரிகரன் (கட்டுரை)

அமெ­ரிக்கா பேர­வையில் இருந்­தாலும் சரி, இல்­லாமல் போனாலும் சரி- இலங்­கையைப் பொறுத்­த­வரை ஜெனீவா என்­பது இனிமேல் அழுத்­தங்­களைக் கொடுக்கும் கள­மாக நீடிக்­குமா என்­பது சந்­தேகம் தான்.

அமெ­ரிக்கா வெளி­யே­றி­யுள்­ளது இலங்கை மீதான அழுத்­தங்­களைக் குறைக்கும் என்று பகிரங்கமா­கவே கருத்து வெளி­யிட்­டி­ருந்தார் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன.

Rajitha  அமெ­ரிக்­காவின் முடிவு தமி­ழர்­க­ளுக்கு பாத­கமா? -ஹரிகரன் (கட்டுரை) Rajithaஅது, அமெ­ரிக்கா ஏற்­க­னவே அர­சாங்­கத்­துக்கு கொடுத்த அழுத்­தங்­களின் அடிப்­ப­டையில் கூறப்­பட்ட அனு­மா­னமே தவிர, இரு­த­ரப்பு உற­வு­க­ளையும் முன்­னி­றுத்தி பார்க்­கப்­பட்ட விட­ய­மன்று

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இருந்து அமெ­ரிக்கா விலகிக் கொள்ள எடுத்­துள்ள முடிவு உல­கெங்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வொஷிங்­டனில், அமெ­ரிக்­காவின் இந்த முடிவை, அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் மைக் பம்­பி­யோ­வுடன் இணைந்து அறிவித்­தி­ருந்தார், ஐ.நாவுக்­கான அமெ­ரிக்க தூதுவர் நிக்கி ஹாலே.

இதனை அமெ­ரிக்கா எடுத்த திடீர் முடி­வென்று கூற­மு­டி­யாது. ஏற்­க­னவே, டொனால்ட் ட்ரம்ப் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றதும், அமெ­ரிக்­காவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில் பெரிய மாற்­றங்கள் இடம்­பெற்­றன.

அப்­போதே, ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை குறித்து ட்ரம்ப் நிர்­வாகம், அதி­ருப்­தி­யான கருத்­துக்­க­ளையே வெளி­யிட்­டது.

 

ஐ.நாவுக்­கான அமெ­ரிக்க தூதுவர் நிக்கி ஹாலே பாது­காப்புச் சபைக் கூட்டம் ஒன்றில் உரை­யாற்­றிய போது, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் மனித உரி­மை­களை மீறு­ப­வர்கள் அங்கம் வகிக்­கி­றார்கள் என்று கூறி­யி­ருந்தார்.

அது­மாத்­தி­ர­மன்றி, இஸ்­ரே­லுக்கு எதி­ரான போக்கை ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை தொடர்ந்து வெளிப்­ப­டுத்­தினால், பேர­வையில் இருந்து அமெரிக்கா வெளி­யேறி விடும் என்றும் அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

இப்­போது அந்த எச்­ச­ரிக்கை தான் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை 2006ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட போதே, அதில் அங்கம் வகிக்க அமெ­ரிக்கா மறுத்து விட்­டது. இப்­போது, ஆட்­சியில் உள்ள குடி­ய­ரசுக் கட்சி தான் அப்­போதும் ஆட்­சியில் இருந்­தது.

2009ஆம் ஆண்டு ஒபாமா தலை­மை­யி­லான ஜன­நா­யக கட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்­னரே, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இணைந்து கொள்ள அமெ­ரிக்கா முடிவு செய்­தது.

2012இல் தான், அமெ­ரிக்கா முதல் முறை­யாக ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடாகத் தெரிவு செய்­யப்­பட்­டது. சரி­யாக, ஆறு ஆண்­டுகள் கழித்து, பேர­வையில் இருந்து விலகிக் கொண்­டி­ருக்­கி­றது.

மனித உரி­மை­களைப் பேணு­வது தொடர்­பாக அமெ­ரிக்­கா­வுக்கு பல்­வேறு நாடு­க­ளுடன் பிரச்­சி­னைகள் உள்­ளன. அதன் தொடர்ச்­சி­யா­கவும், இஸ்ரேல் மீதான தொடர் நட­வ­டிக்­கை­களின் வெளிப்­பா­டா­கவும், குடி­ய­ரசுக் கட்­சியின் வெளி­வி­வ­காரக் கொள்­கையின் பிர­தி­ப­லிப்­பா­கவும் இதனை எடுத்துக் கொள்­ளலாம்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இருந்து, அமெ­ரிக்கா வெளி­யே­றி­யுள்­ள­தா­னது, சர்­வ­தேச அர­சி­யலில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள அதிர்­வு­களைப் போலவே, இலங்கை விவ­கா­ரத்­திலும் இது பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது.

ஏனென்றால், 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடாக நுழைந்த காலப்­ப­கு­தியில் இருந்தே, இலங்கை விவ­கா­ரத்தை ஜெனீ­வாவில் முன்­னி­லைப்­ப­டுத்தி வந்­தது அமெ­ரிக்கா.

2009ஆம் ஆண்டு இலங்­கையில் போர் முடி­வுக்கு வந்­த­வுடன், இலங்­கையில் போரின்­போது நடந்த மீறல்கள் குறித்து விசா­ரணை நடத்த வேண்டும் என்று கோரும் தீர்­மா­னத்தை, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் அவ­சரக் கூட்­டத்தில் நிறை­வேற்ற ஐரோப்­பிய நாடுகள் முற்­பட்­டன.

ஆனால் கடை­சியில், அந்த முயற்சி தோல்வி கண்­ட­துடன், இலங்கை அர­சாங்கம் அதனை தனக்குச் சாத­க­மாக மாற்றிக் கொண்­டது. போரில் வென்ற இலங்­கையைப் பாராட்டும் தீர்­மா­னமே அதில் நிறை­வேற்­றப்­பட்­டது.

அப்­போ­தைய தோல்­விக்கு அமெ­ரிக்கா போன்ற வலி­மை­யான நாடு ஒன்று அந்த முயற்­சியை முன்­னெ­டுக்­கா­தமை கார­ண­மாக கூறப்­பட்­டது.

அப்­போது அமெ­ரிக்கா பேர­வையில் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

2011ஆம் ஆண்டு, இலங்­கையில் நடந்த மீறல்கள் குறித்து விசா­ரிக்கக் கோரும் தீர்­மானம் ஒன்றைக் கொண்டு வர கனடா முற்­பட்­டது. அதற்­கான தீர்­மான வரைவு ஒன்­றையும் கனடா உறுப்பு நாடு­க­ளிடம் கைய­ளித்­தது.

எனினும், கன­டாவின் அந்த முயற்­சிக்குப் போதிய ஆத­ரவு கிட்­டாத நிலையில், அது விவா­தத்­துக்கே எடுக்­கப்­ப­ட­வில்லை. அப்­போதும் அமெ­ரிக்கா போன்ற வலு­வான நாடு ஒன்றின் தேவை உண­ரப்­பட்­டது.

2012 இல் இலங்கை தொடர்­பான தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா முன்­வைக்கப் போகி­றது என்­றதும் தான் ஒரு நம்­பிக்கை ஏற்­பட்­டது.

அது­வ­ரையில் இந்தத் தீர்­மானம் வெற்றி பெறுமா என்ற கேள்­விகள் இருந்து கொண்­டி­ருந்­தன.

 

un_britain_spy_68637_c0-177-4233-2645_s885x516  அமெ­ரிக்­காவின் முடிவு தமி­ழர்­க­ளுக்கு பாத­கமா? -ஹரிகரன் (கட்டுரை) un britain spy 68637 c0 177 4233 2645 sஅமெ­ரிக்க தூதுவர் நிக்கி ஹாலே

அமெ­ரிக்கா 2012, 2013, 2015, 2017 என்று நான்கு தீர்­மா­னங்­களை ஜெனீ­வாவில் கொண்டு வந்­தி­ருந்­தது. அதில், கடைசித் தீர்­மானம் மாத்­திரம் இலங்­கையின் இணை­அ­னு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்­டது.

முத­லா­வது தீர்­மா­னத்தை இலங்கை எதிர்த்த போதும், நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்த இலங்கை அர­சாங்கம், அதனை நிறை­வேற்­ற­வில்லை.

அது­போ­லவே, 2015ஆம் ஆண்டின் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த, 2017இல் இலங்கை அர­சாங்கம் இணங்­கி­யது. ஆனாலும் இன்­னமும் பொறுப்­புக்­கூறல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற உருப்­ப­டி­யான எந்த நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அதற்­கி­டையில், ஆட்­சி­மாற்­றத்தை அடுத்து, இலங்கை தொடர்­பான அமெ­ரிக்­காவின் கொள்­கை­களில் மாற்­றங்கள் ஏற்­பட்­டன, முன்னர் இலங்­கைக்கு கடு­மை­யான அழுத்­தங்­களைக் கொடுப்­பதில் ஆர்வம் காட்­டிய அமெ­ரிக்கா, அண்­மைக்­கா­ல­மாக, இலங்­கையை அர­வ­ணைத்துப் போகத் தொடங்­கி­யுள்­ளது.

இதனால், இலங்கை தனது கடப்­பாட்டை நிறை­வேற்ற வேண்­டிய நிலையில் இருந்து விலகத் தொடங்­கி­யது.

அண்­மையில் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை வெளி­யிட்ட அறிக்­கையில் இலங்கை தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வரை அமெ­ரிக்கா கடும்­போக்கை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்றும், பாது­காப்பு ரீதி­யான கட்­டுப்­பா­டு­களைத் தொடர வேண்டும் என்றும் கூறி­யி­ருந்­தது.

இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான உற­வுகள் பல­ம­டைந்து வந்த கட்­டத்தில், ஜெனீவா நகர்­வுகள் எந்­த­ள­வுக்கு பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமிழ் மக்­க­ளுக்கு நன்­மையைப் பெற்றுத் தரும் என்ற கேள்­விகள் எழத் தொடங்­கின.

ஏனென்றால், ஜெனீ­வாவில் இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்கும் தரப்­பாக இருந்த அமெ­ரிக்கா, ஆத­ரிக்கும் -அர­வ­ணைக்கும் தரப்­பாக மாறத் தொடங்­கிய நிலையில், ஜெனீவா பொறி­மு­றை­களின் ஊடாக தமி­ழர்கள் நீதியைப் பெற்றுக் கொள்­வது சாத்­தி­யமா என்ற சந்­தேகம் எழுந்­தது.

இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லையில் தான் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையை விட்டு வெளி­யே­றி­யி­ருக்­கி­றது அமெ­ரிக்கா.

இது ஜெனீவா தீர்­மா­னங்­களை கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருப்­ப­தாக தமிழர் தரப்பில் பலரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

இது­வரை அழுத்தம் கொடுக்கும் தரப்­பாக இருந்து வந்த அமெ­ரிக்கா இனி­மேலும் அந்த நிலைப்­பாட்டில் தொடரும் என்­பது உறு­தி­யாக இருந்தால் தான், இது தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில் அதிர்ச்­சி­ய­டைய வேண்­டிய விடயம்.

2017 தீர்­மானம் உண்­மையில் தமிழர் தரப்­புக்கு ஏற்­பு­டைய ஒன்­றாக இருக்­க­வில்லை. வேறு வழி­யில்­லாத நிலையில் அதற்குத் தலை­யாட்டும் நிலையே ஏற்­பட்­டது.

ஏனென்றால், அந்த இணக்­கப்­பாட்டுத் தீர்­மானம், நிச்­ச­ய­மாக ஐ.நா எதிர்­பார்த்த கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றை­யையோ, தமி­ழர்கள் எதிர்­பார்த்த சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றை­யையோ உரு­வாக்கும் ஒன்­றாக இருக்­க­வில்லை.

ஜெனீ­வாவில் ஏற்றுக் கொண்ட கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்கும் கடப்­பாட்டில் இருந்து விலகிச் சென்ற இலங்­கையை அழுத்திப் பிடிக்கும் வேலையைக் கூட அமெ­ரிக்கா செய்­ய­வில்லை.

இப்­ப­டி­யான நிலையில், 2019 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்­தையும் காப்­பாற்றி விட்டு இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்தின் முன்­பாக வந்து நிற்கப் போவ­தில்லை.

குறிப்­பாக பொறுப்­புக்­கூறல் தொடர்­பாக இலங்கை எந்த வாக்­கு­று­தி­யையும் நிறை­வேற்­றாமல் கையைப் பிசைந்து கொண்டு தான் நிற்கப் போகி­றது.

அந்தக் கட்­டத்தில் கூட அமெ­ரிக்கா இன்­னொரு தீர்­மா­னத்தின் ஊடாக நீதியை நிலை­நாட்ட முற்­படும் என்ற நம்­பிக்கை பல­ரிடம் இல்­லா­ம­லேயே போயி­ருக்­கி­றது.

ஏனென்றால், அமெ­ரிக்க – இலங்கை உற­வுகள் வலு­வ­டைந்­துள்ள சூழலில் அத்­த­கை­ய­தொரு நகர்வை அமெ­ரிக்கா எடுக்க முற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் அரிது.

ஆக, அமெ­ரிக்கா பேர­வையில் இருந்­தாலும் சரி, இல்­லாமல் போனாலும் சரி- இலங்­கையைப் பொறுத்­த­வரை ஜெனீவா என்­பது இனிமேல் அழுத்­தங்­களைக் கொடுக்கும் கள­மாக நீடிக்­குமா என்­பது சந்­தேகம் தான்.

அமெ­ரிக்கா வெளி­யே­றி­யுள்­ளது இலங்கை மீதான அழுத்­தங்­களைக் குறைக்கும் என்று பகி­ரங்­க­மா­கவே கருத்து வெளி­யிட்­டி­ருந்தார் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன.

அது, அமெ­ரிக்கா ஏற்­க­னவே அர­சாங்­கத்­துக்கு கொடுத்த அழுத்­தங்­களின் அடிப்­ப­டையில் கூறப்­பட்ட அனு­மா­னமே தவிர, இரு­த­ரப்பு உற­வு­க­ளையும் முன்­னி­றுத்தி பார்க்­கப்­பட்ட விட­ய­மன்று.

அதே­வேளை, அமெ­ரிக்கா வில­கி­னாலும், கனடா, பிரித்­தா­னியா போன்ற நாடு­களின் ஊடாக இலங்­கைக்­கான அழுத்­தங்­களை அமெ­ரிக்கா கொடுத்துக் கொண்­டி­ருக்கும் என்று கூறி­யி­ருக்­கிறார் கலா­நிதி தயான் ஜெய­தி­லக.

அந்த வழியைத் தான் தாமும் நாடப் போவ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கிறார்

ஐ.நாவுக்­கான தூது­வ­ராகப் பணி­யாற்­றிய அனு­பவம் கொண்ட தயான் ஜெய­தி­ல­க­வுக்கு, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் அமெ­ரிக்கா அங்­கத்­து­வத்தை பெற்றுக் கொள்­ளா­ம­லேயே அதில் செய்த தலை­யீ­டுகள் நன்கு தெரியும். அந்த வகையில் தான் அவர் கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

ஆனாலும், அமெ­ரிக்கா, பேர­வைக்கு வெளியே இருந்து இலங்­கைக்கு அழுத்­தங்­களைக் கொடுக்­குமா என்­பதை தீர்­மா­னிக்கப் போவது கொழும்பு அர­சியல் தான்.

கொழும்பில் ஆட்­சியில் இருக்­கப்­போகும் தரப்பு எது என்­பதைப் பொறுத்தே அமெ­ரிக்­காவின் அணு­கு­மு­றைகள் தீர்­மா­னிக்­கப்­படும்.

தனக்குச் சாத­க­மற்ற ஒரு அரசு கொழும்பில் உரு­வானால், அமெ­ரிக்கா அதற்கு குடைச்சல் கொடுப்­ப­தற்கு தயங்­காது. அதற்கு கனடா, பிரித்­தா­னியா என்று பல்­வேறு நாடு­களைப் பயன்­ப­டுத்திக் கொள்ளும்.

ஆனால் அதனை அழுத்­தங்கள் என்று கூற­மு­டி­யாது, பல விட­யங்கள் வலி­யு­றுத்­தப்­ப­ட­லாமே தவிர, தீவி­ர­மான அழுத்­தங்­க­ளாக அவை இருக்­குமா என்­பது சந்­தேகம்.

ஏனென்றால், இலங்­கைக்கு எதி­ரான கடு­மை­யான தீர்­மா­னங்கள் இனிமேல் ஜெனீ­வாவில் வரு­வ­தற்கு வாய்ப்­புகள் குறைவு. அவ்­வா­றான அர­சியல் சூழலும் தற்போதைக்கு இல்லை. அமெரிக்கா போன்ற அதனை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நாடுகளும் ஜெனீவாவில் இல்லை.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோ, கனடாவோ, பிரித்தானியாவோ, அமெரிக்காவின் பின்னால் செல்லத் தயாராக இருக்குமே தவிர, தாமாக தலைமை தாங்குவதற்கு தயங்கும்.

2019இல் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றாத ஒரு கட்டத்தில் கூட, அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் இன்னொரு கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் அளவுக்கு இந்த நாடுகள் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்காவின் வெளியேற்றம் தமிழர் தரப்புக்கு சாதகமற்றது என்றாலும், இப்போதைய நிலையில் அதனை மிகப்பெரிய பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது.

அதேவேளை அமெரிக்காவின் செல்வாக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இல்லாமல் போவதானது, இலங்கை போன்ற நாடுகளுக்கு பொறுப்புக்கூறல் கடப்பாடுகளின் மீதான அர்ப்பணிப்பைக் குறைத்து விடும்.

அந்தவகையில், அமெரிக்காவின் வெளியேற்றம் நிச்சயம் பாதகமான ஒன்று தான்.

-ஹரிகரன்-