தமிழகத்தில் இறந்த குட்டியை பிரிய மனமின்றி தாய் குரங்கு சுற்றுத் திரியும் காட்சி அங்கிருக்கும் சுற்றுலாப் பயணிகளிடம் கண்ணீர் வரவைத்துள்ளது.
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று முக்கொம்பு.
இங்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தாய்க் குரங்கு ஒன்று இறந்து மூன்று நாட்கள் ஆன தன்னுடைய குட்டியை பிரிய மனமின்றி, அதை மார்போடு தூக்கிக் கொண்டு திரிகிறது.
அதுமட்டுமின்றி அதற்கு பேன் பார்ப்பது மற்றும் பாலூட்ட முயற்சி செய்வதை பார்க்கும் போது அங்கிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களை அறியாமலே கண்கலங்குகிறது.







