9ஆம் வகுப்பு மாணவனை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சகமாணவன்: அதிர்ச்சி வாக்குமூலம்

குஜராத் வதோதரா நகரின் பரன்பூர் பகுதியில் உள்ள பாரதி பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சகமாணவனை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவன் அளித்துள்ள வாக்குமூலத்தை பார்த்து பொலிசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டுப்பாடம் எழுதாததால், 10-ம் வகுப்பு மாணவரை ஆசிரியர் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், பள்ளிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு உள்ளார். இதற்காக மாணவர் ஒருவரை கொலை செய்யவேண்டும் என திட்டமிட்டுள்ளான்.

அதன்படி, தன்னுடன் பயிலும் தட் தேவி என்ற மாணவனை கழிவறையில் வைத்து சுமார் 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.