தமிழர்களின் மனதை கவர்ந்த கனடா பிரதமரின் சுவாரசிய காதல்!

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005-ஆம் ஆண்டு மே 28-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இது காதல் திருமணமாகும், மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில் வளர்ந்தார்கள்.

சோபியா, ஜஸ்டினின் சகோதரர் மைக்கேலின் பள்ளி வகுப்பு தோழியாவார்.

அப்போது ஜஸ்டினுக்கும், சோபியாவுக்கும் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் வேறு வேறு திசையில் சென்றுவிட்டார்கள்.

பின்னர் 2003-ஆம் ஆண்டு ட்ரூடோவும், சோபியும் மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்து கொண்டார்கள்.

சில மாதங்கள் இருவரும் டேட்டிங் சென்ற நிலையில் அது காதலாக மாறியது. இதையடுத்து திருமணம் செய்ய முடிவெடுத்த அவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து மொன்றியலில் உள்ள தேவாலயத்தில் மே 28, 2005-ல் ஜஸ்டின் – சோபி திருமணம் கோலாகலமாக நடந்தது.

தற்போது வரை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் இத்தம்பதிக்கு சேவியர் ஜேம்ஸ், எல்லா கிரேஸ், ஹாட்ரின் கிரிகொயர் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2015 தேர்தலுக்கு முன்னர் ஜஸ்டின், என் காதல் சோபி என பதிவிட்ட டுவீட் அவரின் வைரல் டுவீட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தான் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது காதல் மனைவி சோபியுடன் நேரம் செலவிட தவற மாட்டேன் என ஜஸ்டின் கூறியது அவரின் அழகான காதலுக்கு உதாரணமாகும்.