விஜய்யின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் ஏதோ திருவிழா போல் கொண்டாடப்பட்டது. எங்கு திரும்பினாலும் பேனர், போஸ்டர் என கலக்கிவிட்டனர்.
சென்னையில் பல இடங்களில் விஜய் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ரசிகர்களும் செம்ம கொண்டாட்டத்தில் இருந்தனர்.
ஆனால், நேற்று மாலை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகினியில் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்க, ஒரு சிலர் ரஜினியின் காலா பேனரை கிழித்தனர்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்க, திரையரங்க உரிமையாளர்களே வருத்தம் தெரிவித்தனர். இந்த செயலுக்கு பலரும் விஜய் ரசிகர்களை திட்ட, ஒரு சிலர் செய்த செயலால் எல்லோருக்கும் கெட்ட பெயரா? என விஜய் ரசிகர்களே வருத்தப்பட்டனர்.
See this video some unloyal fans of Vijay doing this shit activity in
Rohini theater today ?@RIAZtheboss pic.twitter.com/qzXL0dEgXQ— Rajini soldiers (@RajiniSoldiers) 22 June 2018






