பிக்பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தம்? தகராரில் ஈடுபட்ட ஊழியர்கள்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சி சென்னை பூந்தமல்லியில் இருக்கும் ஈவிபி பூங்காவில் படப்பிடிப்பு இடமாக வைத்து, நடத்தி வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் 2. அதிக டிஆர்பியை உயர்த்தும் வகையில் நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் 17 முதல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே இருக்கும் 16 போட்டியாளர்களுக்கும் இடையே இப்போதுதான் சண்டைகள் ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் 2 வில் பல குழு இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான ஊழியர்கள் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெஃப்சி அமைப்பைச் சேர்ந்த 10 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அதன் அமைப்பு கூறியுள்ளது.

இதனால் அந்த 10 சதவிகித ஊழியர்கள் மட்டும் ஜுன் 23 நாளை முதல் பிக்பாஸ் செட்டிற்கு வேலைக்கு செல்ல மாட்டோம் என்று பெஃப்சி அமைப்பின் குழு செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பெஃப்சி அமைப்பின் இந்த முடிவால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் படபிடிப்பு நிறுத்தப்படலாம் என்று கூறிவருகிறார்கள். ஆனால் தொலைக்காட்சி குழுவில் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.