பணக்கஷ்டத்தால் தவிப்பவர்கள் உடனே பணவரவு பெற இதனை செய்யவும்!

பணக்கஷ்டத்தால் தவிப்பவர்கள் உடனடியான தீர்வை பெற கீழ்க்கண்ட முறையினை பின்பற்றவும்.

மிக நியமமாக செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும். காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் ஒன்று முதல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டியது அவசியம்.

20 மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். மொச்சைகள் குழையாமல் முழுதாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.

இதனை ஒரு வெள்ளை துணியில் முடிச்சு அவிழும் வகையில் முடிந்து வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஆட்டு முறை கூறிவிட்டு இந்த வெள்ளை துணியை ஆற்றில் விடவும்.

உச்சரிக்க வேண்டிய மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்

ஸ்ரீம் கமலே கமலாலயே

ப்ரஸீத ப்ரஸீத ஸகல

சௌபாக்யம் தேஹி தேஹி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ

உடனடியாக பலன் தரும் தாந்த்ரீக பரிகாரம் இது. ஆகவே நம்பிக்கையோடு செய்யுங்கள்.