புதிதாக இரண்டாயிரம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இது தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது.
பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.
அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தாது அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதே நோக்கமாகும்.
பேருந்துகளுக்கு 500 என்ஜீன்களை பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.






