பூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்: கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

கரப்பான் பூச்சியின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவித திரவத்தை ‘கரப்பான் பால்’ என்றும், பூமியிலேயே இதுதான் மிகவும் சத்து நிறைந்த பால் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

.பசிபிக் பீட்டில் கரப்பான் என்பது ஒரு வகை கரப்பான் பூச்சி ஆகும். இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தபோது, அந்த கரப்பான்பூச்சி முட்டைகளை வெளியே இடாமல் உடலுக்குள்ளேயே குஞ்சுகளை வளர்த்து, வெளியே விடுகிறது என்பதை கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கரப்பானின் உடலுக்குள் சுரக்கும் வெளிர் நிற திரவத்தை உண்டு, நன்றாக வளர்ந்த பின்பே குஞ்சுகள் வெளியே வருகின்றன என்பதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.இந்த திரவத்தை விஞ்ஞானிகள் ‘கரப்பான் பால்’ என்று அழைக்கின்றனர். மேலும், இது மாட்டுப்பாலை விட 3 மடங்கு சத்து நிறைந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக லியோனார்ட் சாவாஸ் எனும் விஞ்ஞானி கூறுகையில், ‘இந்தப் பாலில் புரோட்டீன், அவசியமான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், சர்க்கரை என்று ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன.

அதனால் தான் இந்தக் கரப்பான்பூச்சியின் குஞ்சுகள், மற்ற கரப்பான் குஞ்சுகளை விட மிக வேகமாக வளர்கின்றன. இதில் சத்து அதிகம் இருந்தாலும், மனிதர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று கூற முடியாது.100 கிராம் கரப்பான் பாலை பெறுவதற்கு ஆயிரம் கரப்பான்பூச்சிகள் தேவைப்படும். பண்ணைகளில் கரப்பான்களை வளர்க்க முடியுமா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிக அளவில் கரப்பான் பால் கிடைத்தால் காபியில் கலக்கலாம். ஐஸ் கிரீம் செய்யலாம்.

அதற்கு முன்பு கரப்பான் பால் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மையளிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.