கண்டி வீதியில் கோர விபத்து..!! தாயும் பச்சிளம் குழந்தையும் ஸ்தலத்தில் பலி….!!

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் தாயும், இரண்டு வயதுடைய ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளது. இந்த விபத்து குருநாகல் – கண்டி வீதி நுகவெல பிரதேசத்தில் நேற்று காலை நடந்துள்ளது.மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதை அடுத்து, தாய் மற்றும் குழந்தை வீழ்ந்தனர். எதிர்த் திசையில் பயணித்த பேருந்துடன் மோதி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்