தலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது!

தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் நேற்று  புதன் கிழமை(13) மதியம் யாழ் புங்குடுதீவு கடற்;கரையில் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் 32 வயதான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ மற்றும், 37 வயதான தோ.எமல்ரன் கூஞ்ஞ ஆகிய இரு சகோதரர்களும் கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ள நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இவர்களுடைய படகு இயந்திரம் பழுதடைந்திருந்தால் வட கடலிலே இவர்கள் தொழிலை மேற்கொண்டதால் இவர்கள் யாழ் பகுதி அல்லது இந்திய கடல் பக்கமே அடைந்திருக்க சாத்தியக் கூறுகள் இருப்பதால் குறித்த பக்கம் நோக்கியும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரையில் சகோதரர்களான குறித்த இரு மீனவர்களும இன்று சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

01  தலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது! 01IMG-0185_1080  தலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது! IMG 0185 1080