காலியில் உள்ள லொத்தர் சீட்டுக்களை விநியோகிக்கும் அலுவலகத்தில் போலியான லொத்தர் சீட்டை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த யுவதி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த யுவதி போலி லொத்தர் சீட்டை சமர்ப்பித்து ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.
யுவதி வழங்கிய லொத்தர் சீட்டு தொடர்பில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அதனை கணனி மூலம் பரிசோதித்துள்ளனர். அப்போது அது போலியான லொத்தர் சீட்டு என்பது தெரியவந்துள்ளது.
காலி, கலஹிட்டியாகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.