நியுசிலாந்து நாட்டு அரசாங்கம் அந்நாட்டின் தேசிய பறவையான கிவியை பாதுகாப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து எலிகளையும் கொல்லுவதற்கு தீர்மானித்துள்ளது. இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிவி பறவையானது நிலத்துக்கடியில், அதனுடைய கூடுகளை அமைத்து முட்டையிடுகின்ற நிலையில், அந்த முட்டைகளை எலிகள் சாப்பிடுவதால், கிவி பறவையினம் அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்காக அந்நாட்டிலுள்ள அனைத்து எலிகளையும் கொல்லுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நியுசிலாந்தில் ஒவ்வொரு வருடமும், 25 மில்லியன் பறவைகள் எலிகளால் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






